தங்கத்துரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை வெளிப்படுத்துக! செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை



வெலிக்கடை சிறைப் படுகொலையின்போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். -இவ்வாறு நேற்று வியாழக்கிழமை பாராளு மன்றத்தில் உரையாற்றிய ரெலோ இயக்கத்தின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கல நாதன் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரே தமிழீழ விடு தலை இயக்கம் (ரெலோ) உருவாவதற்கு மூலகாரணமாக இருந்தனர். 1983 ஜூலை 11கலவரத்தின் ஓர் அம்சமாக வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள கைதிகள் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்டனர். குட்டிமணி உயிருடன் இருக்கும்போதே அவரின் கண்களை தோண்டி சிங்கள கைதிகள் எறிந்து குரூரம் புரிந்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
