வவுனியா காத்தார்சின்னக் குளத்தில் குருதிக்கறைகளுடன் தூக்கிலிருந்து 'இளைஞரொருவர் சடலமாக மீட்பு
1 month ago

வவுனியா காத்தார்சின்னக் குளத்தில் குருதிக்கறைகளுடன் தூக்கிலிருந்து 'இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செல்லத்துரை கபில்நாத் (வயது -24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் உடலில் ஆங்காங்கே குருதிக்கறைகள் காணப்படுகின்றன.
எனவே, இந்த இறப்புத் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், நேற்று முன்தினம் மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
