மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்குக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பெலியத்த பகுதியில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை மேலதிக நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகள் இன்று யோஷித ராஜபக்ஷவை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
அதற்கமைய, அவரை 50 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்குக் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு நீதிவான் தடை விதித்ததுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இது குறித்து அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும், சாட்சியாளர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்குப் போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அனுமதியளித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
