இலங்கை அரசின் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரித்தானிய தூதுவர் அன்ட்ரு பெட்றிக் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான உதவிகளை வழங்கத் தயாரெனவும் பிரித்தானிய தூதுவர் அன்ட்ரு பெட்றிக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரு பெட்றிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக பிரித்தானிய தூதுவர் இதன் போது தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் பிரித்தானியாவில் காணப்படும் முறைமை முக்கியமானது என்றும், அந்த முறையில் ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய தூதுவர், பிரித்தானிய பாராளுமன்ற முறைமைகள் குறித்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் வலியுறுத்தினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
