யாழ்.வடமராட்சி உடுப்பிட்டியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி அதிகாலை கோழி இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். வெளிமாவட்டத்திலிருந்து இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட கோழிகளை வழங்கிய பின்னர் வாகனம் திரும்பிச் சென்றிருந்தது.
இதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, வன்முறை கும்பல் அவரை வாளால் வெட்டியது.
சத்தம் கேட்டு அவரின் மனைவி வெளியே வந்தபோது, அவரை வாள்முனையில் அச்சுறுத்தி தங்க சங்கிலியை கொள்ளையிட்டு அந்தக் குழு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. படுகாயமடைந்த குடும்பஸ்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பில் விசாரணை நடத்திய நெல்லியடி பொலிஸார். நகைக்காகவே இந்தக் கொலை இடம்பெற்றதாக கொலையானவரின் மனைவி பொய்கூறி நாடகமாடியதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசா ரணைகளின் அடிப்படையில் இது திட்டமிட்ட கொலை என்பதை கண்டறிந்தனர். அத்துடன், இந்தக் கொலையுடன் தொடர்புடைய இளைஞரையும் கைது செய்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
