வாகன இறக்குமதி நிதி நிலைமைகள் அரசாங்க மாற்றத்துக்குப் பின்னரும் மாறவில்லை- நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு.

கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலை மைகள் அரசாங்க மாற்றத்துக்குப் பின்னரும் மாறாமல் இருக்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.
"முந்தைய அரசாங்கம் முடிவெடுத்த போது, தேவையான தொழில் நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னர் மத்திய வங்கி பரிந்துரைகளை வழங்கியது." என அவர் கூறினார்.
பெப்ரவரி 1, 2025இற்குள் தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு நிதியமைச்சினுடையது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
