பாராளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு சின்னத்தில் போட்டியிட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - அரியநேத்திரன் அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் பிரிந்திருந்தாலும் கருத்து முரண்பாடுகளால் பிரசாரங்களை மேற்கொண்டாலும் கூட, இனிவரும் காலங்களில் அவற்றைத் தவிர்த்து பாராளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு சின்னத்தில் போட்டியிட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் பா. அரியநேத்திரன்.
நேற்று அவர் தனது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியாக பதவியேற் றுள்ள அநுரகுமார திஸநாயக்கவுக்கு வாழ்த்துகள். பொதுக் கட்டமைப்பாக சிவில் அமைப்புகளும் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக என்னை நிறுத்தின.
எனக்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.
அதற்கு இந்த மக்களுக்கு முதற் கண் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தமிழ்த் தேசியத்தில் எமது மக்கள் உறுதியாக இருப்பதையே காட்டுகிறது.
இணைந்த வட, கிழக்கு தான் தமிழர்களின் அரசியல் தீர்வு என்பதனை இந்த தேர்தல் வெளிக் காட்டி இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித் துவப்படுத்திய என்னை இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்திய போது, கிழக்கு மாகாணத்தைவிட வடக்கு மாகாணத்தில் மக்கள் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்றார்கள்.
விசேடமாக அவர்களுக்கு நன்றி கூறக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இணைந்த வடக்கு, கிழக்கில் ஓர் அரசியல் தீர்வை தருவதற்கான அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - மேற் கொள்வார் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
