

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் இந்த நன்கொடைப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பின் ஊடாக சர்வதேச இந்து கலாசார ஆலோசகரான கலாநிதி இரத்னசாமி இராமேஸ்வரன் என்பவரால் ஜேர்மன் நாட்டிலிருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைகள் இலங்கையின் பல பாகங்களில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாணத்திலுள்ள வைத்திய சாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
