ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டால், சம்பளக் கொடுப்பனவுகளுக்காக 7000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
