
மன்னார் சதொச வளாக மனித புதைகுழி பகுதியில் ஸ்கேனர் இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம் மனித புதைகுழி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேராசிரியர் ராஜ்சோமதேவ தலைமையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள் ளன.
அத்துடன் ஏலவே அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களைக் கொண்டு உயிரிழந்தவர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
