

முல்லைத்தீவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு - நெத்தலியாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கையை மூன்று காட்டு யானைகள் தினமும் இரவு வேலைகளில் சேதப்படுத்தி வருகின்றன.
தற்போது, வெள்ளம் வடிந்து வரும் நிலையில், யானைகள் தொடர்ச்சியாக நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கு இரவு வேளைகளில் காவலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
விதைப்பு மேற்கொள்ளப் பட்டு 40 நாட்கள் கடந்த நிலையில் உள்ள வயல்களை யானைகள் மிதித்து துவம்சம் செய்து வருவதுடன் அப் பயிர்களை மேய்ந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலை ஒவ்வொரு வருடமும் தொடர்வதாகவும் நெற்செய்கை மேற்கொள்ளும் தமக்கு அழிவுகளே அதிகமாக ஏற்படுவதாகவும் உரிய நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
