சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட சீனக் குழு எதிர்வரும் 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம்

தேசிய இன விவகார ஆணையகத்துக்குப் பொறுப்பான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட சீனக் குழு எதிர்வரும் 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று 11 வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ சீனாவின் சிறுபான்மை விவகாரங்களை கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
தமது ஒரு வார கால அதிகாரபூர்வ விஜயத்தில், சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சகத் தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
