லண்டனில் ஈழத் தமிழர்கள் வாழும் ஹரோவில் வன்முறைக்கு திட்டம்?சமூகவலைதளங்களில் பரவும் தகவல்.


லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவில் இன்றிரவு வன்முறை தாக்குதலில் ஈடுபட அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகின என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
பிரிட்டனில் குடியேறிகள், இஸ்லாமியர்ளை இலக்கு வைத்து கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளில் இதுவரை 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளி களை தடுத்து வைக்க 500இற்கும் மேற்பட்ட மேலதிக சிறை அறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. வன்முறைகளை கட்டுப்படுத்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட பொலிஸார் களமிறக்கப் படுவார்கள் என்று பிரிட்டன் அரசாங் கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் முதல் தலையெடுத்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு முதலாவது கடுமையான நெருக்கடி தோன்றியுள்ளது.
இந்த நிலையில், லண்டனில் ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங் களில் ஒன்றான ஹரோவை புதன் கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப் போவதான தகவல்கள் கிட்டியுள்ளன என்று ஹரோ சட்ட மையத்தின் இயக்கு நர் பமீலா ஃபிட்ஸ்பட்றிக் தகவல் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, எச்சரிக்கை தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
முன்னதாக, சௌத்போர்ட் நகரத்தில் கடந்தவாரம் மூன்று சிறுமிகள் 17 வயதான ஆயுததாரி ஒருவரால் கத்தியால் குத்திகொல்லப்பட்டனர். இதனை செய்தவர் ஒரு முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர் என்று பரவிய வதந்தியைத் தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன. இதேபோன்றதொரு வன்முறை கடந்த 2011ஆம் ஆண்டிலும் பிரிட்ட னில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





