இலங்கையில் மதுபான பாவனை, அதன் விளைவுகளால் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மருத்துவ சங்கம் தெரிவிப்பு
5 months ago

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
குறைந்த விலையில் விற்பனை செய்யக் கூடிய மதுபான போத்தல்களைத் தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதுபானம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய தொன்று என்பதனைச் சகலரும் அறிவார்கள்.
இந்த நிலையில் அவ்வாறான புதிய கொள்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுமாயின் கசிப்பு உள்ளிட்டவற்றின் பாவனை அதிகரிக்கக்கூடும்.
அதேநேரம் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் மதுபான பாவனை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவுகிறது-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
