இலங்கை கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் எதிரி கூண்டில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை
5 months ago




இலங்கை கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் எதிரி கூண்டில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கடை நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எதிரி கூண்டில் நின்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்காக எதிரி கூண்டில் நின்ற வேளை சட்டத்தரணி போல் வந்த நபர் ஒருவர் கைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
