போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்ட ஊர்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
அதன் பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
