கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பம்.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த பொலிஸார் குறித்த சிதைவுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
தனியார் நிறுவன வளாகத்தினால் குறித்த செய்தியைக் காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
