அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலிய நிறுவனம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக ஜூலை மாத இறுதி அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் நிறுவனம் தமது நாட்டுக்கு அடுத்தபடியாக சில்லறை பெட்ரோலிய விநியோக செயற்பாடுகளை விரிவுபடுத்தும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
