இந்திய இழுவைப் படகுகளால் சுழிபுரம், காட்டுப்புலம் மீனவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.


இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்.சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் இரவு குறித்த மீனவர் திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்து மீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன.
இதனால் அவரிடம் இருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்டு ஆறு வலைகளே மீதமாகியுள்ளன.
எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில்-
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ட்ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன.
இப்பொழுது மீன்பிடிப் பருவகாலம். இந்திய இழுவைப் படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன்பெற்றே இந்த வலைகளை வாங்கித் தொழில் செய்தேன்.
எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது, வங்கிக் கடனைச் செலுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றேன்.
புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத் திட்டங்களை செய்கின்றார்.
அதுபோல இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள்.
புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
