வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட 28 வயது குடும்ப பெண் கைது

வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட 28 வயது குடும்ப பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரின் வழக்கு நேற்று வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து குறித்த குடும்பஸ்தரை சிறைச்சாலை கொண்டு சென்றபோது அவருடன் உரையாடிப் பொதி ஒன்றை வழங்கியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அப்பொதியில் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸாரால் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
