வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த மதகுரு ஒருவர் கைது

வவுனியா, புகையிரத வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் அட்டகாசம் செய்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, புகையிரத நிலைய வீதியில் நேற்று முன்தினம் இரவு 09.30 மணியளவில் மது போதையில் சென்ற மதகுரு ஒருவர் அப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி போடும் கூட்டு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
பின்னர் அருகில் இருந்த தொலைகாட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக் காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் வீதியில் சென்றோர் மதகுருவை மடக்கிப்பிடித்து வைத்திருந்ததுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த மதகுருவை கைது செய்ததுடன், வவுனியா பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
