திருடர்களை கைது செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசுக்கு என்ன நேர்ந்தது -- எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி

திருடர்களை கைது செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துக்கு என்ன நேர்ந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
திருடர்களை கைது செய்வதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துக்கு என்ன நேர்ந்தது என வினவ விரும்புகின்றோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கோப்புக்களுடன் ஊடக சந்திப்பை நடத்தி திருடர்களைப் பிடிக்கப்போவதாக கூறினர்.
ஆனால் அந்த விடயத்துக்கு இப்போது என்ன நேர்ந்துள்ளது ? திருடர்களை கைது செய்துள்ளனரா என வினவ விரும்புகின்றோம்.
குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு அரசாங்கத்திடம் முறைமையொன்று இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
அந்த வகையில் நோக்கும்போது பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்தமையை போன்று பொய்யுரைத்து நாட்டை கொண்டு நடத்த முடியும் என எண்ணுகின்றனர்.
ஆட்சியை கொண்டு நடத்த முடியவில்லையாயின் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும்-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
