யாழ்.அளவெட்டியில் கணவனால் இரு கைகளும் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்.அளவெட்டியில் கணவனால் இரு கைகளும் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டே தனது மனைவியின் கைகளை கணவர் வெட்டினார் என்று கூறப்படுகின்றது.
அளவெட்டியில் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
சந்தேகநபரான கணவர் அண்மையில் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார். அவர் தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இது தொடர்பில் இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மனைவி ஒருவருடன் கைபேசியில் காணொலி உரையாடலை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து கணவன் மனைவியுடன் முரண்பட்டுள்ளார். முரண்பாடு முற்றிய நிலையில் கணவன் மனை வியின் இரு கைகளையும் வெட்டியுள்ளார்.
கைகள் வெட்டப்பட்ட பெண்ணை அயலவர்கள் உடனடியாக தெல்லிப் பழை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு கை துண்டாடப்பட்டதுடன், மற்றைய கை யும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
