யாழ்.செம்மணிப் புதைகுழி விசாரணை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளிப்பு

யாழ்.செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய விடயங்களுக்குப் பதிலளிக்கையிலேயே, நீதியமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் இடம்பெறும்.
இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய விடயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்கின்றேன்.
இதன்படி இது தொடர்பான நடவுடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில்.எதிர்வரும் நாள்களில் விளக்கமளிப்பேன் - என்றார்.
ITOR SELVA
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
