பாராளுமன்ற தேர்தல் அமைதியாக வன்முறைகளற்ற முறையில் நடைபெற வேண்டி யாழில் சர்வமத தலைவர்களால் பிரார்த்தனை

இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெற வேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டி யாழ்ப்பாணத்தில் சர்வமத பிரார்த்தனை சர்வமத தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் ஆயர் இல்லத்தில் யாழ்ப்பாண சர்வமத தலைவர் இந்து மதகுரு கிருபானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் சர்வமத தலைவர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு, பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும், மக்கள் தமது ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்தார்கள்.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்ளான கத்தோலிக்க திருச்சபை சார்பில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெயரட்ணம், இந்து சமய குரு கிருபானந்தா, பொளத்த மத தலைவர் சார்பில் நாக விகாரை விகாராதிபதி விமலரத்ன தேரர், இஸ்லாமியர்களின் சார்பில் ரகிம் மௌவி, தென்னிந்திய திருச்சபை சார்பில் சர்வமத பேரவை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
