சிம்பாப்வேயில் உணவுப் பஞ்சத்தால் 200 காட்டு யானைகளைக் கொன்று, இறைச்சியை மக்களுக்கு வழங்க திட்டம்.

சிம்பாப்வேயில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளமையால், 200 காட்டு யானைகளைக் கொன்று, அதன் இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க தேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப் படி கடந்த 40 ஆண்டுகளில் இந்த மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 700 வன உயிரினங்களைக் கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது.
இதில் 83 யானைகளும் அடங்கும். இந்நிலையில், நமீபியாவைத் தொடர்ந்து சிம்பாப்வேயிலும் யானைகளைக் கொன்று மக்க ளுக்கு உணவாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வரு கின்றது.
கடந்த ஆண்டு மாத்திரம் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளைக் கொன்று, அதன் இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
