சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இரு சீனப் பெண்கள் கண்டியில் கைது
8 months ago

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு பெண்கள் இருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டி மத்திய சந்தை வளாகத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 மற்றும் 48 வயதுடைய இரண்டு சீனப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
