யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
8 months ago



யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி நோக்கி செல்லும் சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று (01) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
உயர் பாதுகாப்பு வலயமாகவும் இராணுவ முகாமுக்கு அருகாமையிலும் உள்ள இந்த வீதி நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.
அண்மையில், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவை சந்தித்தபோது, குறித்த வீதியை திறந்து வைத்து மக்களின் போக்குவரத்துக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்தார்.
இதன்படியே, இந்த வீதியை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
