இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகளை காசாவில் விடுவிக்கவுள்ளனர்.


இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருள்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் 12,000 இற்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
6.75 பில்லியன் டொலர் மதிப்புள்ள குண்டுகள், வழிகாட்டுதல் கருவிகள் மற்றும் உருகிகள், 660 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெல்ஃபயர் ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்க வெளியுறவுத்துறை கையெழுத்திட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
