ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணாமல்போன பொருட்கள் குறித்து விசாரணை.-- குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றுக்கு அறிவிப்பு
6 months ago

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மையில் காணாமல்போன சில பொருட்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட் டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு கூறியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும், இந்தப் பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்கு மூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன பொருட்கள் குறித்து விசாரித்து, எதிர்காலத்தில் நீதிமன்றத்துக்கு ஒரு பட்டியலை சமர்ப்பிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
