

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் இன்று புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வைத்தியர்களைத் தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட 5 வழக்குகளே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் முன்னிலையாகியிருந்தார். வைத்தியர் அர்ச்சுனா ஊழல் மோசடிகளைத் தடுக்கும் முகமாகவே கடமை நேரத்தில் வைத்தியர்கள் வெளியே செல்வதனைத் தடுத்திருந்தார் எனவும். வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிவிட்டு பின்னர் மேலதிக நேரக் கடமை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடுகின்றனர் எனவும் சட்டத்தரணி தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது இரு தரப்பு விவாதங் களையும் கவனத்தில் எடுத்த நீதிபதி 5 வழக்குகளையும் எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதிக்குத் தவணையிட்டார்.
அதேநேரம் வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து தனது தொலைபேசி மற்றும் பணத்தைப் பறித்தமைக்காக வைத்தியர்கள் மீது தொடுத்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதிக்குத் தவணை யிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
