

புதிய சேவையுடன் சிங்கப்பூரில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு குறைந்த கட்டண விமான சேவையை வழங்கவுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏசியா இன்று அறிவித்துள்ளது.
குறித்த விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வாரமும் ஜெட்ஸ்டார் ஏசியா தமது ஏர்பஸ் யு320 விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து இருவழிச் சேவைகளை மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன், இரண்டு இடங்களுக்கும் இடையிலான பயணத்துக்காக 90,000 ரூபாய்க்கும் குறைந்த கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், ஜெட்ஸ்டார் ஏசியா சிங்கப்பூரிலிருந்து கொழும்புக்கு ஒரு வழி கட்டணமாக 149 டொலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், கிளப் ஜெட்ஸ்டார் உறுப்பினர்களுக்கு 139 டொலர்களுக்கும்; குறைவான கட்டணங்கள் அறிவிடப்படவுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
