மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி வரும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
1 year ago

மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் கிராமத்துக்குச் செல்லும் வீதிகள், விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகள், போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இம்முறை தேர்தலை தங்கள் கிராம மக்கள் புறக்கணிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் தாங்கள் பதில் சொல்லத் தயார் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
