சுவீடன் பேராசிரியர் பார்ட் க்லெம் எழுதிய "தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் போருக்குப் பிந்தைய நிலைமாற்றமும்" நூல் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில்
8 months ago

சுவீடன் நாட்டின் கோதம் பேர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்ட் க்லெம் எழுதிய “இறைமை பற்றிய அபிலாசைகளை நிகழ்த்திக் காட்டுதல்: இலங்கையிலே தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் போருக்குப் பிந்தைய நிலைமாற்றமும்" என்ற நூல் பற்றிய அறிமுக நிகழ்வு நாளை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
மொழியியல் ஆங்கிலத் துறையினரால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்த நிகழ்வில் நூலாசிரியர் பார்ட் க்லெம், நூல் பற்றிய தனது அறிமுக உரையை நிகழ்த்துவார்.
அதனையடுத்து சட்டத்தரணியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சமூகவியற் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் ஆகியோரும் நூல் பற்றிய தமது கருத்துரைகளை வழங்குவர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
