
வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை விசுவமடு, சுண்டிக்குளம் சந்திப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களை மறித்துச் சோதனையிட முயன்றபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கண்ணாடிப் போத்தல் ஒன்றால் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கி விட்டுத் தப்பியோடினர் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தருமபுரம் பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தருமபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
