யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவில் இருந்து இன்று நீர் கசிந்துள்ளது
5 months ago




யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்தது.
சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்.
சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், பொது மக்கள் என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
