யாழ். நெல்லியடியில் கைது செய்யப்பட்ட வேட்பாளர் பொ.கஜேந்திரகுமார் பொலிஸ் பிணையில் விடுவிப்பு
8 months ago

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் இன்று (24) மாலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
