
அந்தமான் கடற்பிராந்தியங்களுக்கு 2 நாள்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடல்சார் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்படி கடற்பிராந்தியங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருகின்றமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை நாளை அளவில் புயலாக வலுப்பெறுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது மேற்படி கடற்பிராந்தியங்களில் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரும் மீனவர்களும் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
