இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி நிலையில், மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
6 months ago

இலங்கையில் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது.
இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வீழ்ந்த இடத்தில் நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
குடும்பமாக உழைக்கும்போது குடும்ப முன்னேற்றத்துக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும்.
அவ்வாறுதான் நாட்டுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
ஆனால், அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காகப் போன்று இவை நாட்டு நலனுக்காக எடுக்கப்பட வேண்டும். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
