








வவுனியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதீன், காதர்மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம் மற்றும் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸார், இராணுவத் தரப்பு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
