
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விதமாக விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணி யகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட் டுள்ள குறித்த புனர்வாழ்வு நிலை யத்தில் 100 பெண்கள் வரை புனர்வாழ்வளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு, இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புதிய புனர்வாழ்வு நிலையத்துக்கு புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
