அமெரிக்காவில் 15 வயதான சிறுவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 15 வயதான சிறுவன் ஒருவன் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலின் தென்கிழக்கில் உள்ள பால்சிட்டி பகுதியில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸார் விரைந்து வந்தபோது அங்கு 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பிணமாக கிடந்தனர்.
அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருந்தனர்.
உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு தொடர்பாக 15 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேவேளை உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் பொலிசார் தெரிவிக்கவில்லை.
கைதான நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
