யாழில் விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார்.

1 year ago


யாழில் விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த 04.10.2024 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி நடேசு பரமேஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (06.10.2024) அதிகாலை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் விபத்து குறித்து மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவர் மிதிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அண்மைய பதிவுகள்