தமிழர் பகுதியில் அதானியின் காற்றாலை மின் திட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு
1 year ago
இந்தியாவின் அதானி நிறுவனத்தால் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு தற்போது அனுமதி வழங்கமுடியாது எனப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மன்னார் - பூநகரி ஆகிய இரண்டு இடங்களில் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்கள் அமைக்கப்படவிருந்தன.
இந்தத் திட்டத்துக்கான மதிப்பீடு மற்றும் அவற்றின் ஊடாக சூழலுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வழங்கப்பட்ட உரிமத்தின் விவரங்கள் உள்ளிட்டவற்றின் மேலதிகத் தகவல்களை சமர்ப்பிக்கக் கோரப்பட்டது.
எனினும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கு மேலும் பல தகவல்கள் அவசியமாகவுள்ளன என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
