
இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், பெரிய வன்முறைச் சம்பவங்களோ, இடையூறுகளோ இன்றியும் நடை பெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தேர்தலை வெற்றிகரமாக முடிக்க உதவிய தேர்தல் ஆணையகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை அவர்கள் பாராட்டியுள்ளனர்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் தகவல்படி, நேற்று முன் தினம் 108 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனினும், அதில் எதுவுமே பாரதூரமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் மக்கள் தொடர்பு மற்றும் ஈடுபாடு அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்த விரிவான கண்ணோட்டம் இன்று திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
