வவுனியாவில் அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது
6 months ago

அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தக் காணி விற்பனை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்தே சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
