இலங்கைக்கு 3ம் கட்ட நிதியுதவி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக, IMF இன் நிறைவேற்றுச்சபை இறுதிக் கட்டப் பரிசீலனை

இலங்கைக்கு மூன்றாம் கட்ட நிதியுதவி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை இறுதிக் கட்டப் பரிசீலனை மேற்கொள்ளவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கடந்த ஒரு மாதகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிக்குழாம் மட்ட பேச்சுகள் முடிவுக்கு வந்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் புதிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் என்பனவும் பணிக்குழாம் மட்ட உடன்பாட்டில் சேர்க்கப்பட்டு நாணயநிதியத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, பணிக்குழாம் மட்ட உடன்பாடுகளைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு மூன்றாம் கட்ட நிதி வழங்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில், எதிர்வரும் வாரங்களில் நாணய நிதிய நிறைவேற்றுச்சபை இறுதிக்கட்டப் பரிசீலனையில் ஈடுபடவுள்ளது.
மூன்றாம் கட்ட நிதியுதவியின் கீழ் இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.
இந்தக் கடனுதவி இலங்கைக்குக் கிடைப்பதற்கான இறுதித் தடைதாண்டலாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் அனுமதியே காணப்படும் நிலையில், அந்தச் சபை என்ன முடிவை எடுக்கப் போகின்றது என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு வரிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார நாடாளுமன்றத்தில் வைத்து அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
