பொது மன்னிப்புக் காலத்தின் காலத்தின் முடிவில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15 ஆயிரத்து 667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளனர் என்று இலங்கை இராணுவத் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான விடுமுறையின்றி கடமைக்குச் சமுகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்காக ஒரு மாதகால பொது மன்னிப்புக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தின் 2023 டிசெம்பர் 31 மற்றும் அதற்கு முன் விடுமுறை இன்றி பணிக்குச் சமுகமளிக்காத இராணுவத்தினரை சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அனுமதி இன்றி கடமைக்குச் சமுகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவத்தைச் சேர்ந்த 373 பேர் இராணுவத்தை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
