உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி இடம்பெறுகின்றன.-- பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொது மக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
முன்னாள் அரசாங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் குழு ஒன்று விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.
மேலும், முன்னைய அரசாங்கத்தின் இரண்டு அறிக்கைகளில் ஒன்றில் உயிர்த்த ஞாயிறு குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காணப்படுகின்றன.
புதிய அறிக்கைகளில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கம் இந்த பரிந்துரைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாங்கள் இந்த இரண்டு அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போதைய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
அவர் அதனை நிறைவேற்றுவாரா என கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொண்டிருக்கின்றது-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
