அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்தியா-இலங்கைத் திட்டங்கள் குறித்து அரசு மீள ஆராயவுள்ளது
9 months ago

வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தித் திட்டம் உட்பட இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் இந்தியாவுடனான திட்டங்கள் குறித்து அரசாங்கம் இறுதிமுடிவு எடுக்கும்.
அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த 248 மதிப்பீடுகளுக்காக இந்த மறு ஆய்வு இடம்பெறுகின்றது.
பொதுத்தேர்தலின் பின்னரே அந்த திட்டங்களை முன்னெடுப்பதா? அல்லது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதா? அல்லது நாங்கள் முன்வைக்கும் விடயங்களுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? என்பது குறித்து அரசு தீர்மானிக்கும் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
